1. Home
  2. தமிழ்நாடு

ஆந்திர அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம்..!

ஆந்திர அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம்..!

சித்தூர் மாவட்டத்தில் உள்ள முடிவெடு உள்பட மூன்று பகுதிகளில் நீர்த்தேக்கம் அமைக்க முடிவெடுத்த ஆந்திர அரசு, அதற்கான பணிகளை மேற்கொண்டது. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்றும், இந்த பணி தொடர்ந்தால், பல கிராமங்கள் பாதிக்கப்படும் என்றும் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களான நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், சத்திய கோபால் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. நீர்த்தேக்கம் அமைக்கும் பணியை உடனே நிறுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், கட்டுமான பணிகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு அமைத்து உத்தரவிட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் விதிகளை முறையாகக் கடைப்பிடிக்காத காரணத்தால், ஆந்திர மாநில அரசின், நீர்வள ஆதாரத்துறைக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தனர். இந்த தொகையை மூன்று மாதத்திற்குள் கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியத்திற்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் விதிமீறல் விவகாரத்தில், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்திருப்பது ஆந்திர அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like