1. Home
  2. தமிழ்நாடு

100 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து வந்த பிரபல அரசியல் தலைவர்!!

100 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து வந்த பிரபல அரசியல் தலைவர்!!

கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

அவர் நீதிமன்ற காவலில் மத்திய மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த நவம்பர் 2ஆம் தேதியுடன் முடிந்தது.

அதனை தொடர்ந்து சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவலை 9ஆம் தேதி வரை நீட்டித்த நீதிமன்றம், ஜாமீன் மனு குறித்து தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தது.


100 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து வந்த பிரபல அரசியல் தலைவர்!!

அதன்படி, நேற்று சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சஞ்சய் ராவத், விடுதலையானதை தொடந்து தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

மேலும் சிறையில் வெளியே வந்த சஞ்சய் ராவத்துக்கு சிவசேனா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து சஞ்சய் ராவத் சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

சஞ்சய் ராவத் உடன் அவரது சகோகதரரும் எம்.எல்.ஏ.வுமான சுனில் ராவத் மற்றும் சிவசேனா கட்சி நிர்வாகிகளும் சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

newstm.in

Trending News

Latest News

You May Like