மோடி தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியே எமெர்ஜென்சி போல உள்ளது - சஞ்சய் ராவத்..!
இந்நிலையில் மகாராதிராவில் இந்தியா கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே சிவ சேனா அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எமெர்ஜென்சி குறித்து தெரிவித்துள்ள கருத்து அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. அவர் கூறியுள்ளதாவது:-
அந்த சமயத்தில் நாட்டில் சிலர் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றனர். இந்திரா காந்தி அரசை எதிர்த்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த அரசியல்வாதிகள், நமது வீரர்களிடமும் ராணுவத்திடமும் அரசின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய வேண்டாம் என்று அவர்கள் நேரடியாகவே வலியுறுத்த தொடங்கினர்.
இதுபோன்ற ஒரு சூழலில் வாஜ்பாய் பிரதமராக இருந்திருந்தாலும் எமெர்ஜென்சியை அறிவிக்கும் முடிவையே எடுத்திருப்பார். வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தும் திட்டங்களும் அரங்கேறின. எனவே எம்ர்ஜென்சி தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. சிவ சேனாவின் பால் சாஹேப் தாக்கரே எமர்ஜென்சிக்கு ஆதரவு தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பும் வெளிப்படையாகவே எமெர்ஜென்சிக்கு ஆதரவு தெரிவித்தது.
அமித் ஷாவுக்கு எமர்ஜென்சி குறித்து முழுமையாக தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும். எமெர்ஜென்சிக்கு பிறகு ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அதை அரசியலமைப்பு படுகொலையாக பார்க்கவில்லை. தற்போதுள்ள மோடி தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியே எமெர்ஜென்சி போல உள்ளது. இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.
.png)