10 வயது சிறுவன் பலி..!! நீதி கேட்கும் தாய் - வைரலாகும் வீடியோ..!!

கோவை தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பிரதீஸ். துபாயில் பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி சுகன்யா. இவர் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் லக்ஷன் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்களது அடுக்குமாடி குடியிருப்பு அருகே சிறுவர்கள் விளையாட்டு பூங்கா உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை நாள் என்பதால் சிறுவன் லக்ஷன் மாலையில் பூங்காவிற்கு விளையாட சென்றார். அவர் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டு இருந்த போது பராமரிப்பு இல்லாமல் இருந்த மின்சார வயரை சிறுவன் மிதித்ததில் தூக்கி வீசப்பட்டான்.
இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக மயங்கிய நிலையில் இருந்த சிறுவனை அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே லக்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">