“ஒரு மரத்துக்கு பதில் 10 மரங்கள் நடவேண்டும்” : நீதிமன்றம் அதிரடி!

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சாலை விரிவாக்கத்திற்காக ஒரு மரத்தை வெட்டினால் பத்து மரங்களை நட்டு பராமரிக்காவிட்டால், மரத்தை வெட்ட வேண்டாம் என உயர்நீதிமன்றக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக, புதிய மரங்களை நடவில்லை எனக்கூறி விருதுநகரை சேர்ந்த நபர் தொடர்ந்த பொதுநல வழக்கில், நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
மரங்களை தொடர்ந்து வெட்டினால் சுற்றுச்சூழல் மேலும் மோசமடையும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்கள் மற்றும் அதற்கு பதிலாக நடப்பட்ட மரங்கள் குறித்து சென்னை, மதுரை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய இயக்குநர்கள் பதில் மனு தாக்கல் செய்யக் கோரி, வழக்கை நவம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
newstm.in