1. Home
  2. தமிழ்நாடு

கர்நாடகாவில் இருந்து 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க முடிவு!!

1

தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாய்கள் குருவை சாகுபடி செய்துள்ளனர். இது தொடர்பாக தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதன்படி டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட போவதாக அறிவித்துள்ளது. அதன்படி, தினமும் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட உள்ளதாக உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவிற்கு மறுப்பு தெரிவித்து கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அரசு வெளியேறியது. மேலும் , ‘தமிழகத்துக்கு நீர் திறப்பது தொடர்பாக காவிரி நீர்ப்பாசன கழக நிபுணர்கள், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும்’ என்று கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கூறினார். இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்டிற்கு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசு மனுத்தாக்கல் செய்யப்பட்டதில் , “காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தினமும் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். செப்டம்பர் மாதம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய 36.76 டிஎம்சி தண்ணீரையும் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, இன்று காலை காங்கிரஸ் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றிய பின்னர் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்பொழுது, முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேசியது தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், கடந்த ஆண்டு மலைபொழிவு அதிகாமாக இருந்ததால் சுமார் 400 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலந்தது என்று தெரிவித்தார். இதன்படி, மேகதாது அணை இருந்திருந்தால் தமிழகம் எதிர்பார்க்கும் தண்ணீரை திறந்து விட்டிருக்க முடியும் என்று கூறினார் . எனவே தமிழக அரசு மேகதாது அணை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like