1. Home
  2. தமிழ்நாடு

10 கி.மீ. வேகத்தில் நகரும் மிக்ஜாம் புயல் : தத்தளிக்கும் சென்னை..!

1

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (டிச.04) பகல் 01.00 மணி வரை தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவில், 34 செ.மீ. மழை பதிவு!

இதனிடையே, மழை முன்னெச்செரிக்கை குறித்து அமைச்சர் கே.என்.நேருவிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாநகராட்சிப் பகுதியில் பெய்த மழை, எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தொலைபேசியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

சென்னை மீனம்பாக்கத்தில் மணிக்கு 82 கி.மீ. வேகத்தில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. காலை 08.30 மணியுடன் மீனம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தொடர் கனமழை காரணமாக, ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அன்னனூர், திருமுல்லைவாயல், பட்டாபிராம், சேக்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.

வெள்ளம் செல்லும் பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஜமாலியா, வீனஸ், அகரம், பேப்பர் மில்ஸ் ரோடு பகுதிகளிலும் மழைநீர் சூழந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

பழவேற்காடு பகுதியை சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது குளத்துமேடு ,கருங்காளி, செஞ்சியம்மன் நகர் பகுதியில் உள்ள 308 பேரை மீட்டு ஆண்டார் மடம் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்ததால், வேளச்சேரி விஜயநகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது!

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வேளச்சேரி, மேற்கு தாம்பரம் செல்லக்கூடிய சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரியில் இருந்து பள்ளிக்கரணை, மேற்கு தாம்பரம் போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள்.

மிக்ஜாம் புயல் எதிரொலியாக கோவை சென்னை இடையே 4 ரயில் சேவைகள் ரத்து - தென்னக ரயில்வே அறிவிப்பு கோவை எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை - கோவை “வந்தே பாரத்”, சென்னை - கோவை “இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்” ரத்து செய்யப்பட்டுள்ளன

Trending News

Latest News

You May Like