பஸ் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி..!!
நாக்பூரில் இருந்து கோண்டியா பகுதிக்கு 35 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. காஜ்ர் என்ற கிராமம் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக பைக் ஒன்று சாலையில் குறுக்கிட்டதாக தெரிகிறது. பைக் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பி உள்ளார்.
அதிவேகத்தில் சென்று கொண்டிருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் நொடிப்பொழுதில் அங்கேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்தவர்களில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.