1. Home
  2. தமிழ்நாடு

10 பாஜக எம்.பி.க்கள் ராஜினாமா..!

1

நான்கு மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் 21 எம்.பி.க்களுக்கு பா.ஜ., டிக்கெட் வழங்கியது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 7 எம்.பி.க்கள் போட்டியிட்டனர். அதே நேரத்தில் சத்தீஸ்கரில் நான்கு எம்.பி.க்களுக்கும், தெலுங்கானாவில் மூன்று எம்.பி.க்களுக்கும் சட்டசபையில் சீட்டு வழங்கப்பட்டது. தற்போது, ​​சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.,க்களை பார்லிமென்ட் உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. பாஜக கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவுடன் அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய சபாநாயகரை சந்திக்க வந்தனர்.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 10 பாஜக எம்.பி.க்கள் ராஜினாமா செய்தன்ர். இதில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேர்,  ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 3 பேர், சத்தீஸ்கரில் 2 பேர் அடங்குவார்கள்.

சத்தீஸ்கர், ராஜஸ்தானை சேர்ந்த ராஜினாமா செய்த எம்.பி.,க்கள் விவரம்

அருண் சாவோ மற்றும் கோமதி சாய் ஆகிய இரண்டு பேர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், தியா குமாரி மற்றும் கிரோரி லால் மீனா ஆகியோர் மூன்று பேர் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜினாமா செய்த எம்.பி.,க்கள் விவரம்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் சிங் படேல், ராகேஷ் சிங், உதய் பிரதாப் மற்றும் ரீத்தி பதக் ஆகியோர் ராஜினாமா செய்த எம்.பி.க்கள் ஆவார்கள். 
 

Trending News

Latest News

You May Like