1. Home
  2. தமிழ்நாடு

10ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 9ஆம் வகுப்பு மாணவன்!!

10ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 9ஆம் வகுப்பு மாணவன்!!

10 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 9ஆம் வகுப்பு மாணவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, பெற்றோர்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதே பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி தெரிவித்தார்.


10ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 9ஆம் வகுப்பு மாணவன்!!

இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் மாணவனை கைது செய்து திருச்சியில் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

மாணவி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like