1. Home
  2. தமிழ்நாடு

10 மணி நேரம் டிக்டாக் வீடியோ பார்த்தால் ரூ.83,000 சம்பளம்!!

10 மணி நேரம் டிக்டாக் வீடியோ பார்த்தால் ரூ.83,000 சம்பளம்!!

10 மணி நேரம் டிக்டாக் வீடியோ பார்த்தால், ஆயிரம் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் 83,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று அமெரிக்காவில் உள்ள நிறுவனம் அறிவித்துள்ளது.

Ubiquitous என்ற அமெரிக்க நிறுவனம் டிக்டாக் வீடியோக்களை ஆர்வத்துடன் பார்க்கும் நபர்களுக்கு அதிரடி ஆஃபருடன் வேலை வழங்குகிறது. நீங்கள் ஒரு செஷனில் 10 மணிநேரம் டிக்டாக் வீடியோக்களை பார்க்க வேண்டும்.

அப்படி நீங்கள் பார்த்தால், ஒரு மணிநேரத்திற்கு 100 அமெரிக்க டாலர் என 1,000 அமெரிக்க டாலர் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.82,900.


10 மணி நேரம் டிக்டாக் வீடியோ பார்த்தால் ரூ.83,000 சம்பளம்!!

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயதை தாண்டியிருக்க வேண்டும். Ubiquitous என்ற அந்த நிறுவனத்தின் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை நீங்கள் நிரப்ப வேண்டும்.

டிக்டாக்கில் தற்போதைய ட்ரெண்ட் என்ன, வளர்ந்து வரும் டிரெண்ட் என்ன போன்றவற்றை இந்த நிறுவனம் ஆய்வு செய்கிறது. இதற்காக தான் இப்படி ஒரு வேலையை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like