1. Home
  2. தமிழ்நாடு

காதலிக்க மறுத்ததால் பொது இடத்தில் தாக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி மனமுடைந்து தற்கொலை..!!

காதலிக்க மறுத்ததால் பொது இடத்தில் தாக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி மனமுடைந்து தற்கொலை..!!

திருவாரூர் மாவட்டம் காட்டூர் விளாகம் பகுதியில் வசித்து வந்த பெண்ணின் கணவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். அப்பெண் தனது 10ம் வகுப்பு படிக்கும் மகளுடன் வசித்து வந்துள்ளார். மற்றொரு மகள் பெண்ணின் தம்பி வீட்டில் படித்து வருகிறார். 10ம் வகுப்பு மாணவி காலாண்டு விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் காட்டூர் விளாகம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் தீனதயாளன் (19), டிப்ளமோ முடித்துவிட்டு வீட்டில் உள்ளார். தீனதயாளன் குடும்பமும் அப்பெண்ணின் குடும்பமும் நட்பு ரீதியில் பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் தீனதயாளனும், மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிய வந்ததால் இரு வீட்டிலும் அவர்களை கடுமையாக கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருடைய தாய் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது அந்த மாணவி புடவையில் தூக்குப்போட்டு கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மாணவியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மாணவியின் தாய் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் காட்டூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் தீனதயாளன் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், தரக்குறைவாக பேசியதால் மனமுடைந்து தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அனைத்து மகளிர் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் போக்சோ வழக்குப் பதிவு செய்து காதலன் தீனதயாளனை கைது செய்துள்ளனர்.


காதலிக்க மறுத்ததால் பொது இடத்தில் தாக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி மனமுடைந்து தற்கொலை..!!

இது குறித்து மாணவியின் தாயார் கூறுகையில், ஒரே ஊர் என்பதால் எங்களது குடும்பமும் அவர்களது குடும்பமும் நட்பு ரீதியாக பழகி வந்தோம். இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் தெரிய வந்ததும் நான் எனது மகளை கண்டித்து வைத்தேன். அதே சமயம் தீனதயாளின் அம்மா ஊர் முழுவதும் எனது மகளை பற்றி அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசி வந்திருக்கிறார். மேலும் என்னிடமும் போன் செய்து எனது மகளைப் பற்றி தரக்குறைவாகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளையும் கூறினார்.

ஊர் முழுவதும் எனது மகளைப் பற்றி பொய் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வந்துள்ளார். மேலும் கடந்த 3-ம் தேதி இருந்த தீனதயாளன் எனது மகளுடன் தகராறில் ஈடுபட்டு எனது மகளை அடித்து காயப்படுத்தி உள்ளார். இந்தத் தொடர் பிரச்சினைகள் காரணமாக மன உளைச்சலில் இருந்த எனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் எனது மகளை போன் மூலம் தனது பாலியல் இச்சைக்கு இணங்குமாறும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாகவே எனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.


Trending News

Latest News

You May Like