10 ரூபாய் நாணயங்கள் கொடுத்து ரூ.3.5 லட்சத்திற்கு பைக் வாங்கிய இளைஞர்!!
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் உடற்பயிற்சி ஆசிரியருக்கான பட்டயப் படிப்பு முடித்துவிட்டு தற்போது விளையாட்டு இயக்குனருக்கான மேல்படிப்பை கோவையில் தங்கி படித்து வருகிறார் .
பறவைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட இவர் வீட்டில் பந்தயப் புறாக்கள்மற்றும் லவ் பேர்ட்ஸ் வளர்ப்பில் ஈடுபடுவதோடு பறவைகள் வளர்ப்புக்கான கூண்டுகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக இவர் பத்து ரூபாய் நாணயங்களை சேமித்து வந்துள்ளார். இந்த நாணயங்களின் மொத்த மதிப்பு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தொட்டதை தொடர்ந்து KTM பைக் வாங்க முடிவு செய்தார்.
இதையடுத்து ஈரோட்டில் பெருந்துறை சாலையில் உள்ள ஷோ ரூமுக்கு இரண்டு கார்களில் 775 கிலோ கொண்ட 10 ரூபாய் நாணயங்களை எடுத்துச் சென்றார். இதைப்பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ரூ.3.5 லட்சத்திற்கு 10 ரூபாய் நாணயங்களை கொடுத்து இரு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார்.
பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என சிறிய கடை முதல் பெரிய கடைகள் வரை வாங்க மறுக்கின்றனர். எனவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பத்து ரூபாய் நாணயங்களை கொண்டு 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பைக் வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
newstm.in