புதிய நாடாளுமன்றத்தின் 10 சிறப்பம்சங்கள் ஒர் பார்வை..!!
![புதிய நாடாளுமன்றத்தின் 10 சிறப்பம்சங்கள் ஒர் பார்வை..!!](https://newstm.in/static/c1e/client/106785/migrated/2828861e4711d1f0a8301aa2b02b5a86.webp?width=836&height=470&resizemode=4)
1. டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மூலம் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில், இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான அரசியலமைப்பு மண்டபமாக உருவாக்கப்பட்டுள்ளது.
2. எம்.பி.க்களுக்கான ஓய்வறை, நூலகம், பல குழு அறைகள், உணவு சாப்பிடும் பகுதிகள் மற்றும் ஏராளமான வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவைகள் உள்ளன.
3. 64,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், முக்கோண வடிவில், 4 மாடி கட்டடமாக, புதிய நாடாளுமன்ற கட்டடம் உருவாக்கப்பட்டு உள்ளது.
4. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கியான் திவார், ஷக்தி திவார் மற்றும் கர்மா திவார் என்ற பெயரில், 3 முகப்பு வாசல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
5. முக்கிய நபர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு என தனித்தனி நுழைவு வாயில்கள் உள்ளன்.
6. புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.
7. 800 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 300 மாநிலங்களவை உறுப்பினர்கள் அமரும் வகையில், விசாலமாக, புதிய நாடாளுமன்றக் கட்டடம் உருவாக்கப்பட்டு உள்ளது.
8. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சீராக நடைபெறும் பொருட்டு, கமிட்டி அறைகளில் ஆடியோ - வீடியோ வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
9. கூட்டு அவை நிகழ்வுகளின் போது, மக்களவை சபாநாயகர் அறையில், 1280 பேர் அமரும் வசதி செய்யப்பட்டு உள்ளது.
10. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், மக்களவை பகுதி, தேசிய பறவையான மயில் போன்ற காட்சி அமைப்பிலும், மாநிலங்களவை தேசிய மலரான தாமரை காட்சி அமைப்பிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
10. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், மக்களவை பகுதி, தேசிய பறவையான மயில் போன்ற காட்சி அமைப்பிலும், மாநிலங்களவை தேசிய மலரான தாமரை காட்சி அமைப்பிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.