விரைவில் வெளியாகிறது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.! எப்போ தெரியுமா ?
தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெற்றன.ஏறத்தாழ 16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். விடைத்தாள்களை திருத்தும் பணிகள் கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. அதேபோல, பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20 ஆம் தேதி நிறைவு பெற்றது.மாநிலம் முழுவதும் 4,167 மையங்களில் 9.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
இதையடுத்து பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 தேர்வு முகாம்களில் மேற்கொள்ளப்பட்டன.ஏப்.24-ல் தொடங்கிய இந்தப்பணிகள் நேற்று முன்தினம் நிறைவு பெற்றன. இப்பணியில் 60,000 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது.
திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணிகள் நேற்றுடன் (மே 4) முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.