சோகம்! வெடிவிபத்து எண்ணிக்கை 10-ஆக உயர்வு!!
காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தோர் என்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
வளத்தோட்டம் என்ற பகுதியில் நரேந்திரன் என்பவர் கோவில் திருவிழாக்களுக்கு தேவையான வாணவேடிக்கை செய்யும் பட்டாசு ரகங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அங்கு 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நண்பகல் பட்டாசு தொழிற்சாலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. ஆலையில் பணியில் இருந்த 26 பேரில் 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர் நரேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வெடிவிபத்து தொடர்பாக ஆட்சியர், எஸ்.பி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் போது பட்டாசு சத்தம் 5 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள தூரத்தில் கேட்டதாக கூறப்படுகிறது.
newstm.in