1. Home
  2. தமிழ்நாடு

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 கிலோ அரிசி இலவசம்-சித்தராமையா அறிவிப்பு..!!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 கிலோ அரிசி இலவசம்-சித்தராமையா அறிவிப்பு..!!

பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று நிருபர்களுக்கு கூறியதாவது:- நான் முதல்வராக இருந்தபோது, அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் ஒருவருக்கு 7 கிலோ அரிசி இலவசமாக வழங்கினோம். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த பாஜக அதை 5 கிலோவாக குறைத்துவிட்டது. இதை நான் எதிர்த்தேன். ஆனால் பாஜக தனது முடிவை மாற்றவில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 கிலோ அரிசி இலவசம்-சித்தராமையா அறிவிப்பு..!!

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அன்ன பாக்கிய திட்டத்தில் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்தை நாங்கள் காங்கிரசின் 3-வது உறுதிமொழியாக அறிவிக்கிறோம். இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.4 ஆயிரம் கோடி செலவாகும். எங்கள் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறி ஒவ்வொரு வீட்டிலும் உத்தரவாத அட்டை வழங்கவும் முடிவு செய்துள்ளோம்.

கர்நாடகத்தில் பசியால் யாரும் வாடக்கூடாது என்பது எங்களின் விருப்பம். இது சித்தராமையா திட்டம் அல்ல, மோடியின் திட்டம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகிறார். ஒருவேளை இது மோடியின் திட்டமாக இருந்தால் குஜராத், உத்தரபிரதேசத்தில் இலவச அரிசி வழங்கும் திட்டம் அமலில் ஏன் இல்லை என்பதை அவர் விளக்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like