1. Home
  2. தமிழ்நாடு

10,+1,+2 மாணவர்கள், தேர்வுக்கு சானிட்டைசர், தண்ணீர்பாட்டில் எடுத்துச் செல்ல அனுமதி!

10,+1,+2 மாணவர்கள், தேர்வுக்கு சானிட்டைசர், தண்ணீர்பாட்டில் எடுத்துச் செல்ல அனுமதி!


தேர்வர்கள் தங்களுடன் தண்ணீர் பாட்டில் எடுத்து வந்திருந்தால், அதனை தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு, எட்டாம் வகுப்பு தனித்தோ்வர்களுக்கான தேர்வுகள், தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு ஆகியவை செப்டம்பர் 21ம் தேதி துவங்கி அக்டோபர் 5ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

இந்தத் தேர்வுகளில் கலந்துக் கொள்ளும் மாணவர்கள் துணைத் தேர்வுகளை எழுத செல்லும் போது, தங்களுடன் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு சென்றிருந்தால், அவற்றை தேர்வு எழுதும் அறைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தேர்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுகளில் கலந்துக் கொள்ளும் மாணவர்கள் தங்களுடன் தண்ணீர்பாட்டில், சானிடைசர் ஆகியவைகளை எடுத்துச் செல்லவும், கையுறைகளை அணிந்துக் கொண்டு தேர்வு எழுதவும் அரசுத் தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது. தேர்வு மையத்திற்கு முகக்கவசம் அணியாமல் வரும் மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்குதல் வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like