10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டிய காதலன் கைது..!
செஞ்சி அருகே, பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டிய காதலனை போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகர் (27). கேட்டரிங் படித்து விட்டு, வேலையின்றி உள்ள இவர், செஞ்சி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை கடந்த 7 மாதமாக காதலித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்துள்ளார். மேலும், நடந்ததை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் செய்வதறியாது தவித்த சிறுமி, இது குறித்து தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்தவுடனேயே மாணவியின் பெற்றோர் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ஞானசேகரை பிடித்து விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் போலீசார் அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.