1. Home
  2. தமிழ்நாடு

10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த சக நண்பர்கள்!!

10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த சக நண்பர்கள்!!

10 வயது சிறுவனை அவனது நண்பர்களே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சீலாம்பூர் என்ற பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுவன் கடந்த 18ஆம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நான்கு பேரும் 10-12 வயதான சிறார்கள்.

இவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட சிறுவனின் நண்பர்கள். சம்பவத்தன்று சிறுவனை கட்டாயப்படுத்தி குச்சிகளால் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரும், சிறுவனை படுகாயங்களுடன் அங்கேயே விட்டுச் சென்றனர்.


10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த சக நண்பர்கள்!!


சிறுவனின் அந்தரங்க பகுதிகளில் கம்பிகளை செலுத்தி வன்கொடுமை செய்தது மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மகளிர் ஆணையம் இந்த சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. டெல்லியில் பெண்கள் மட்டுமல்ல, ஆண் சிறார்களும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதை இது உணர்த்துவதாக மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மலிவால் தெரிவித்துள்ளார்.

குற்றச்சம்பவம் தொடர்பாக போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை ஒரு சிறுவனை கைது செய்து சிறார் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள மற்றவர்களை காவல்துறை தேடி வருகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like

News Hub