10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி...!

10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி...!
X

பெண்கள் பிரிமீயர் லீக்கின் முதலாவது சீசன் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி.வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் ஆடும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில் நேற்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் ஆடின. இதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெய் இழப்புக்கு 105 ரன்களே எடுத்தது. அந்த அணி தரப்பில் கிம் கார்த் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். டெல்லி அணி தரப்பில் மாரிசான் கேப் 5 விக்கெட்டும், ஷிகா பாண்டே 3 விக்கெட்டும் ராதா யாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி ஆடியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் மெக் லானிங், மற்றும் அதிரடி ஆட்டக்காரர் ஷபாலி வர்மா ஆகியோர் அதிரடியில் மிரட்டினர். அவர்கள் பவர்பிளேயான முதல் 6 ஓவர்களில் 87 ரன்கள் திரட்டினர். அதிரடியில் மிரட்டிய ஷபாலி 19 பந்தில் அரைசதம் கடந்து அசத்தினார். இறுதியில் அந்த அணி 7.1 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட இழக்காமல் 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

Next Story
Share it