1. Home
  2. தமிழ்நாடு

ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு 1 கிலோ தக்காளி பரிசு..!

1

ஹெல்மெட்டின் அவசியம் குறித்து பலமுறை தஞ்சாவூரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி பரிசாக அளிக்கப்பட்டது. 

சாலை விபத்துகளில் பெரும்பாலும் தலையில் அடிபட்டு தான் பலரும் உயிரிழக்க நேரிடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் உயிரிழப்பை தடுத்திட ஹெல்மட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட போக்குவரத்து போலீசார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஹெல்மட் அணிந்து சென்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தஞ்சை போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் பொதுமக்களிடம் பேசுகையில்.. விபத்து ஏற்பட்டால் சில நேரங்களில் தலை நசுங்கி உயிரிழப்பு ஏற்றுகிறது. தக்காளி கிழே விழுந்தால் உடைந்து வீணாகிவிடும் அது போல் தான் தலையும் என்பதால் தற்போது விலையும் உயர்ந்துள்ள தக்காளியை பரிசாக வழங்குகிறோம் என்றார்.

Trending News

Latest News

You May Like