1. Home
  2. தமிழ்நாடு

போலி ஹால்மார்க்குடன் ஒரு கிலோ நகைகள் பறிமுதல்..!

Q

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நகைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து நகைகளிலும் கடையின் முத்திரை, ஹால்மார்க் முத்திரை ஆகியவற்றை பதிவிட்டு விற்பனை செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. எனினும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சின்னஞ்சிறு நகைக் கடைகளில் போலி ஹால்மார்க் முத்திரையுடன் நகைகள் விற்பனை செய்வதாக நேற்று இந்திய தரக்கட்டுப்பாடு நிர்ணய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், சென்னை அருகே கேளம்பாக்கத்தில் உள்ள சின்னஞ்சிறு நகைக் கடைகளில் இன்று காலை இந்திய தரக்கட்டுப்பாட்டு நிர்ணயத்தின் இணை இயக்குனர் ஜீவானந்தம், துணை இயக்குனர் தினேஷ் ராஜகோபாலன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில், ஒரு நகைக் கடையில் போலி ஹால்மார்க் முத்திரையுடன் தரம் குறைந்த தங்க நகைகள் விற்பனைக்கு வைத்திருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அந்த நகைக் கடையில் இருந்த 16 வளையல்கள், 25 சங்கிலிகள், 4 ஜோடி கம்மல்கள், 217 மோதிரங்கள் உள்பட மொத்தம் ஒரு கிலோ 173 கிராம் எடையுள்ள 262 தங்க நகைககள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த நகைக்கடை உரிமையாளர்மீது இந்திய தர நிர்ணய சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like