தனியார் மருத்துவமனைகளில் 1 கோடி தடுப்பூசிகள் தேக்கம்.. வெளியானது பகீர் தகவல்..!

இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஒரு கோடி தடுப்பூசி வரை பயன்படுத்தப்படாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஒருசில தனியார் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு சார்பில் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஒரு கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தாமல் உள்ளதாக தெரியவந்துள்ளது, இதில், 15 முதல் 20 சதவீதம் தடுப்பூசிகள் அடுத்த மாதத்தில் காலாவதியாகும் நிலையில் உள்ளதால் இது குறித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான மக்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு நடத்தும் சிறப்பு முகாம்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்கின்றனர் என்பதும், தனியார் மருத்துவமனைக்குச் செல்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.