+1 மாணவியின் காதலன் உள்பட 3 பேர் போக்சோவில் கைது!!

+1 மாணவியின் காதலன் உள்பட 3 பேர் போக்சோவில் கைது!!
X

மதுரையை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் பள்ளியில் படித்து வந்த 16 வயது மாணவியை காதலிப்பதாக ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கீரைத்துறையில் உள்ள அக்கா வீட்டிற்குச் சென்றிருந்த மாணவியை ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கார்த்திக் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களை வரவழைத்து அவர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் கார்த்திக் அவனது நண்பர்களான ஆதித்யா, ஹரிதாஸ் ஆகிய 3 பேர் போக்சோவில் கைது செய்தது போலீஸ்.

Next Story
Share it