+1, +2 பள்ளி மாணவர்களுக்கு... புதிய அறிவிப்பு வெளியிட்ட தேர்வுத் துறை.!!
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல் நேரடியாக பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து கடந்த மார்ச் 1 முதல் 9-ம் தேதி வரை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதையடுத்து பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் பாதுகாப்பான முறையில் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் 13-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதே போல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஏப்ரல் மாதம் முதல் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில், பொதுத் தேர்வுகள் விரைவில் துவங்க உள்ள நிலையில்,11 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான, தேதிகளை தேர்வு துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி,12-ம் வகுப்பு விடைத்தாள்களை வரும் ஏப்ரல்11-ம் தேதி துவங்கி, ஏப்ரல் 21-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், 11-ம் வகுப்பு விடைத்தாள்களை ஏப்ரல் 24-ம் தேதி துவங்கி, மே 4-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11-ம் வகுப்பில் அரியர் தேர்வு விடைத்தாள்களை ஏப்ரல் 15-ம் தேதி துவங்கி, 21-ம் தேதிக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.