1. Home
  2. தமிழ்நாடு

பிரபல WWE வீராங்கனை திடீர் மரணம்!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

பிரபல WWE வீராங்கனை திடீர் மரணம்!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

அமெரிக்காவை சேர்ந்த சாரா லீ, 2015-ல் டபிள்யூடபிள்யூஇ ரியாலிட்டி காம்பிடிஷன் சீரிஸில் Tough Enough பட்டத்தை வென்றார். அதன்பிறகு NXT தொடரிலும் ஒப்பந்தமானார். அடுத்தடுத்த வெற்றிகள் மூலமாக சாரா ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.கடந்த 2017-ம் ஆண்டு முன்னாள் மல்யுத்த வீரர் வெஸ்டின் பிளேக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று சாரா மரணமடைந்திருப்பதாக அவரது தாய் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த அறிவிப்பில்,"கனத்த இதயத்துடன் இந்த செய்தியை உங்களிடம் பகிர்கிறேன், நம்முடைய சாரா வெஸ்டன், ஏசுவிடம் சென்றுவிட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல WWE வீராங்கனை திடீர் மரணம்!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

சாராவின் மறைவையொட்டி டபிள்யூடபிள்யூஇ போட்டியின் சூப்பர் ஸ்டார்களான செல்சியா கிரீன், நிக்கி ஆஷ் உள்ளிட்ட ஏராளமானோர் சாரா லீ மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டபிள்யூடபிள்யூஇ வீராங்கனை நிக்கி எழுதிய பதிவில், "நீ பல வழிகளில் மிகவும் திறமையானவராக இருந்தாய். உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் மிகவும் நேசித்தவள் நீ. அனைவரிடத்திலும் மிகவும் அன்பாகவும், தன்னலமற்றவராகவும் இருந்தாய். என்னை சிரிக்க வைத்தாய். ஐ லவ் யூ சாரா" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சாராவின் மறைவையொட்டி டபிள்யூடபிள்யூஇ அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் "சாரா லீ மறைவுச் செய்தி கேட்டு டபிள்யூடபிள்யூஇ அமைப்பு மிகுந்த வேதனைப்படுகிறது. Tough Enough போட்டியின் முன்னாள் சாம்பியன் சாரா லீ. உலகளவில் டபிள்யூடபிள்யூஇ போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும் இளைஞர்களுக்கு உற்சாகமூட்டுபவராக சாரா லீ இருந்தார். சாரா லீ குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் டபிள்யூடபிள்யூஇ ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like