1. Home
  2. தமிழ்நாடு

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #JusticeForPreethi

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #JusticeForPreethi

தெலங்கானா மாநிலம், ஜனகாமா மாவட்டத்தில் உள்ள கொடகண்ட்லா அடுத்த மொண்ட்ராய் கிர்னிதாண்டாவை சேர்ந்தவர் தராவத் நரேந்திரா, ரயில்வே பாதுகாப்பு படை ஏஎஸ்ஐ. இவர் தனது குடும்பத்துடன் ஐதராபாத்தில் குடியேறி வசித்து வந்து வருகிறார்.

இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இளைய மகள் ப்ரீத்தி(26).இவர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாராங்கல் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.இந்நிலையில், அதே கல்லூரியை சேர்ந்த சீனியர் மாணவர் முகமது சாயிஃப் என்பவரால் தொடர் ராகிங் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.இந்தநிலையில் தனது பெற்றோர் மூலம் இது குறித்து கல்லூரி முதல்வரிடம் புகாரும் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த புகார் மீது பெரிதாக நடவடிக்கை எடுக்காமல் பேச்சுவார்த்தை மட்டும் நடத்தி அனுப்பிவிட்டதாக தெரிய வந்துள்ளது. அதற்கு பிறகு தன் மீதே புகார் தெரிவிக்கிறாயா என்று கூறி ப்ரீத்தியை மீண்டும் மிரட்டியுள்ளார் முகமது.

சீனியரின் ராக்கிங் பொறுத்து கொள்ள முடியாமல் ப்ரீத்தி தனது உடலில் அனஸ்தீசியா மயக்கம் ஊசி போட்டுகொண்டுள்ளார். இதனால் அவரது உடல் உறுப்புகளில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியது. வென்டிலேட்டரில் மருத்துவ சிகிச்சை அளித்து வரப்பட்டது.மூன்று நாட்களுக்கு முன்பு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் நேரில் சென்று மாணவியை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார் ப்ரீத்தி. இதனால், தெலுங்கானா மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது. ப்ரீத்தியை ராகிங் கொடுமைக்கு உள்ளாக்கிய முகமது சாயிஃபை தூக்கில் போட வேண்டுமென்றும், #JusticeForPreethi என்றும் பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி இன்னொரு பக்கம் இந்து பெண்ணை, இஸ்லாமிய வாலிபர் கொன்றுவிட்டார் என்றும் மதரீதியான கருத்துக்களும் பரப்ப பட்டு வருகின்றன. தெலுங்கானா முழுவதும் மாணவர்கள் போராட்டத்தை துவங்கியுள்ளனர். இந்த நிலையில் தெலுங்கானாவில் பரபரப்பு நிலவி வருகிறது.


Trending News

Latest News

You May Like