தொழிலதிபருக்கு வர வேண்டிய 90 லட்சம் ரூபாயை வசூலிக்க உதவிய ‘ChatGPT’ செயலி..!!
அமெரிக்காவைச் சேர்ந்த கிரேக் ஐசென்பர்க் என்ற தொழிலதிபருக்கு அவரது வாடிக்கையாளர் ஒருவர் 90 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. இதை அவர் செலுத்தாமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தார். இதையடுத்து, பணத்தை வசூலிக்க ‘ChatGPT’ செயலியின் உதவியை கிரேக் ஐசென்பர்க் நாடினார்.
பணத்தைத் திரும்பத் தராமல் ஏமாற்றி வரும் வாடிக்கையாளரை கடுமையாக எச்சரிக்கும் வகையில், வாக்கிய அமைப்புகளுடன் கடிதம் ஒன்றை ‘ChatGPT’ செயலி தயாரித்து தந்தது. இந்த கடிதத்தை மின்னஞ்சல் வாயிலாக கிரேக் ஐசென்பர்க் அனுப்பியதுடன், அந்த வாடிக்கையாளர் பணத்தை உடனே திரும்பக் கொடுத்துவிட்டார்.
வழக்கறிஞரையும், நீதிமன்றத்தையும் நாடாமல், பைசா செலவின்றி பணத்தை வசூலித்துவிட்டதாக கிரேக் ஐசென்பர்க் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.
‘ChatGPT’ செயலி மனிதர்களின் பல்வேறு கேள்விகளுக்கு தனது செயற்கை அறிவைக் கொண்டு, விளக்கமாக பதில் தந்து வரும் நிலையில், இது மனித வாழ்வில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என அடுக்கடுக்கான கேள்விகளும், அச்சங்களும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த செயலியால் இப்படியும் ஒரு வசதி இருப்பது தெரிய வந்துள்ளது.