நொறுக்குதீனியில் 90ஸ் கிட்ஸ் தான் கொடுத்து வைத்தவர்கள்... எப்படி தெரியுமா ?

நொறுக்குதீனியில் 90ஸ் கிட்ஸ் தான் கொடுத்து வைத்தவர்கள்... எப்படி தெரியுமா ?
X

90ஸ் கிட்ஸ் தாங்கள் பள்ளி படித்துக்கொண்டிருந்த காலத்தில் சாப்பிட்ட நொறுக்குத்தீனிகளை பற்றி நினைத்துப்பார்த்தால் சத்தியமா இப்ப இருக்குறதெல்லாம் ஒன்னுமே இல்லன்னு சொல்லிட்டு போயிடுவாங்க.

இந்த விசயத்தில் 90ஸ் கிட்ஸ் தான் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் சாப்பிட்டு மகிழ்ந்த நொறுக்குத்தீனிகள் எல்லாம் வேற லெவல் சுவையை கொண்டிருக்கும். நானும் ஒரு 90ஸ் குழந்தை என்பதால் அதில் ஒரு சில அயிட்டங்களை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறன்.

1. பேரிக்காய்

அந்தக்காலத்தில் பள்ளிக்கூட வாசலில் ஆயாக்கடையில் இருக்கும் பேரிக்காய் விலை எட்டணா அல்லது ஒரு ரூபாய் தான். மிளகாய் தடவி வைத்திருக்கும் பேரிக்காயை கடிக்கும் போது புளிப்பு மற்றும் காரம் இரண்டு சுவையும் நாக்கை பதம் பார்க்கும்.

2. மாங்காய்

பேரிக்காய் சீசன் இல்லாத நேரத்தில் அனைவரும் விரும்பி சாப்பிட்டது மாங்காய் தான். இது இப்போதும் பலருக்கும் பிடித்த நொறுக்குத்தீனியாக இருந்து வருகிறது.
3. இலந்த வடை

இலந்தை பழம் சாப்பிட்ட காலமும் நினைவிருக்கிறது. அதே சமயம் வேற லெவல் ருசியுடன் இருக்கும் இலந்தை வடையும் ஆயாக்கடையில் இருக்கும் சூப்பர் ஸ்னாக்ஸ் அயிட்டங்களில் மறக்க முடியாத ஒன்று.
4. ரஸ்னா

ஆரஞ்சு ஜூஸ் என்றால் எங்க காலத்து குழந்தைகள் அனைவருக்கும் நியாபகம் வரும் ஒரே விசயம் ரஸ்னா தான்.

5.சத்து மாவு உருண்டை

இந்த உருண்டையை வைத்து ஒரு சிலர் விளையாடுவாங்க, சிலர் ரசித்து ருசித்து சாப்பிடுவாங்க. நீண்ட நேரம் வைத்து சாப்பிட ஏற்ற ஒன்று இந்த சத்து மாவு உருண்டை.

6. முறுக்கு

ஆயாக்கடை முதல் அண்ணாச்சி கடை வரை எல்லா இடத்திலும் இதை வாங்கி சாப்பிடாத நாளே கிடையாது. ஒரு ரூபாய்க்கு மூன்று முதல் நான்கு முறுக்கு வரை கிடைக்கும். அதை விரல்களில் மோதிரம் போல் மாட்டிகிட்டு கடித்து தின்பது சூப்பராக இருக்கும்.

7. ஆசை சாக்லேட்

காலையில் பள்ளிக்கூடம் வரும் போதும் சரி, மாலை வீடு திரும்பும் போதும் சரி, பல குழந்தைகளும் இதை சப்பி சாப்பிட்டுக்கொண்டே தான் இருப்பாங்க.


Next Story
Share it