1. Home
  2. தமிழ்நாடு

பேருந்து – கார் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் பலி!!

பேருந்து – கார் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் பலி!!

குஜராத் மாநிலத்தில் நெடுஞ்சாலையில் பேருந்து மற்றும் கார் மோதி கொண்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

நவ்சாரி என்ற பகுதியில் அகமதாபாத் - மும்பை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் முற்றிலும் உருக்குலைந்து போனது.

பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்தது. இந்த விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து ஏற்பட்டதும் அக்கம்பக்கத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


பேருந்து – கார் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் பலி!!

விபத்து குறித்து நவ்சாரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வி.என். பட்டேல் விசாரணை மேற்கொண்டார். காயம் அடைந்தவர்கள் சூரத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like