1. Home
  2. தமிழ்நாடு

பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 9 பேர் பலி..!

பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 9 பேர் பலி..!

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைபகுதியை மையமாக வைத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.8 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இதன் தொடர்ச்சியாக துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

மேலும் இந்தியாவிலும் பல மாநிலங்களில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக வடமாநிலங்களில் இன்று இரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் மற்றும் ஹரியானா உள்பட பல மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்றைய நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான், இந்தியாவை விட விட பாகிஸ்தானில் தான் அதிகமாக பதிவாகி உள்ளது.

பாகிஸ்தானில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லமாபாத், ராவல் பிண்டி, குவெட்டா, பெஷாவர், கோஹட், லக்கி மார்வட் உள்ளிட்ட பகுதிகள் குலுங்கின. பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் இரண்டு பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோல், 160 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள க்மன் மாகாணத்தில் 2 பேர் பலியாகி உள்ள நிலையில், ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

Trending News

Latest News

You May Like