அதிரடி! இந்தியாவில் 9 லட்சம் வாகனங்களுக்கு தடை!!
மாசு ஏற்படுத்தும் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கும் நடவடிக்கையாக, பழைய வாகனங்கள் அழிப்புக் கொள்கையின்படி ஏப்ரல் 1 முதல் 9 லட்சம் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும் என மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாட்டில் கார்பன் வெளியேற்றம் இல்லாத நிலையை எட்டுவதை இலக்காகக் கொண்டு, பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்காக பழைய வாகன அழிப்புக் கொள்கையை பிரதமர் மோடி கடந்த 2021ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.
அதன்படி, மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
இதன்மூலம், அரசுப்பேருந்துகள் உள்ளிட்ட 9 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத எத்தனால், மெத்தனால் மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
newstm.in