1. Home
  2. வர்த்தகம்

வாடிக்கையாளர்களே வங்கி பணிகளை திட்டமிட்டுக்கோங்க!! பிப்ரவரி மாதத்தில் 9 நாட்கள் வங்கிகள் இயங்காது..!!

வாடிக்கையாளர்களே வங்கி பணிகளை திட்டமிட்டுக்கோங்க!! பிப்ரவரி மாதத்தில் 9 நாட்கள் வங்கிகள் இயங்காது..!!

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவங்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும்.பொதுமக்கள் தங்களது வரவு - செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.

அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. பிப்ரவரி மாதத்தில் சுமார் 9 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாடிக்கையாளர்களே வங்கி பணிகளை திட்டமிட்டுக்கோங்க!! பிப்ரவரி மாதத்தில் 9 நாட்கள் வங்கிகள் இயங்காது..!!



பிப்ரவரி மாத வங்கி விடுமுறை பட்டியல்:

பிப்ரவரி 5, 2023 - ஞாயிற்றுக்கிழமை

பிப்ரவரி 11, 2023 - சனிக்கிழமை - இரண்டாம் சனிக்கிழமை

பிப்ரவரி 12, 2023 - ஞாயிற்றுக்கிழமை

பிப்ரவரி 18, 2023 - சனிக்கிழமை - மகா சிவராத்திரி (குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும்)

பிப்ரவரி 19, 2023 - ஞாயிற்றுக்கிழமை

பிப்ரவரி 20, 2023 - திங்கட்கிழமை - மாநில தினம் (அருணாச்சல பிரதேசம், மிசோரம் மட்டும்)

பிப்ரவரி 21, 2023 - செவ்வாய்க்கிழமை - லூசார் (சிக்கிம் மட்டும்)

பிப்ரவரி 25, 2023 - சனிக்கிழமை - 4வது சனிக்கிழமை

பிப்ரவரி 26, 2023 - ஞாயிற்றுக்கிழமை


Trending News

Latest News

You May Like