1. Home
  2. தமிழ்நாடு

அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளிலேயே 89.66 டிகிரி வெயில்..!!

அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளிலேயே 89.66 டிகிரி வெயில்..!!

இந்த ஆண்டு கோடை காலம் சற்று முன்னரே ஆரம்பித்து விட்டதாக சொல்லலாம். ஏனென்றால் மார்ச் மாதத்திலேயே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. காற்றில் ஈரப்பதம் குறைந்திருந்ததால் வெயிலின் தாக்கத்தை அதிகம் உணர முடிந்தது.

இத்தகைய சூழ்நிலையில் தமிழகம்- புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. புதுவையில் நேற்று முன்தினம் கனமழை கொட்டியது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்து வந்தது.

இந்தநிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. இந்த கத்திரி வெயில் வருகிற 29-ந்தேதி வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்னி நட்சத்திர முதல் நாளில் அதிக அளவில் வெயில் இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் வெயில் கடுமை குறைவாகவே இருந்தது. நேற்று அதிகபட்சமாக 92 டிகிரி வெப்பம் பதிவானது. காலை, மாலை வேலையில் இதமான சூழலே நிலவியது.பெரம்பலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று மாவட்டத்தில் 91.4 டிகிரி அளவு வெயில் பதிவானது.


Trending News

Latest News

You May Like