1. Home
  2. தமிழ்நாடு

விஷ சாராயத்திற்கு பலி 82 ஆக உயர்வு..!!

விஷ சாராயத்திற்கு பலி 82 ஆக உயர்வு..!!

பீகாரில் விஷ சாராயம் குடித்ததில் பலர் பலியாகியுள்ளனர். இந்த பலி எண்ணிக்கை 82 ஆக உயர்ந்து உள்ளது. இவற்றில் சரண் மாவட்டத்தில் அதிக அளவாக 74 பேர் உயிரிழந்து உள்ளனர். சிவான் மாவட்டத்தில் 5 பேரும், பெகுசராய் மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

இந்த விஷ சாராய பலியானது தொடர்ந்து பீகாரின் பல பகுதிகளுக்கும் பரவி வருகிறது. 25 பேருக்கு பார்வை பறிபோயுள்ளது.

30 பேர் வரை பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 12 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. இதனால், உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதனை தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள, பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை பற்றி விசாரணை மேற்கொள்ள மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதிக அளவில் பலர் பலியான நிலையில், இந்த விவகாரம் பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. விரிவான அறிக்கையை அளிக்கும்படி அரசையும் கேட்டு கொண்டுள்ளது. போலீசாரின் எப்.ஐ.ஆர். பதிவு, பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை, ஏதேனும் இழப்பீடுவழங்கப்பட்டால் அதுபற்றிய தகவல்களை அளிக்கும்படியும் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

Trending News

Latest News

You May Like