1. Home
  2. தமிழ்நாடு

வரும் ஏப்ரல் முதல் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது..!!

வரும் ஏப்ரல் முதல் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது..!!

இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கண்காணித்து வரைமுறை செய்கிறது. இந்த நிலையில் மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே கோரிக்கை வைத்து வந்தன.

அதை ஏற்று சில அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை வருகிற ஏப்ரல் மாதம் முதல் உயர்த்துவதற்கு மருந்து நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி காய்ச்சல், தொற்றுகள், தோல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை மற்றும் இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7 சதவீதம் வரை உயருகிறது.

Trending News

Latest News

You May Like