காசியில் வெறும் 8 ஆண்டுகளில் பிரதமர் கொண்டு வந்திருக்கும் மாற்றங்கள் அதிசயமானது..!!

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பிறகு, நகரில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பாராட்டிய அவர், "காசியில் கடந்த 8 ஆண்டுகளில் நடந்திருப்பது மிகவும் அதிசயமானது," என்றார். 2012-ல் தான் காசிக்கு சென்றிருந்தபோது, அந்த நகரத்தை "அற்புதமும் அழுக்கும்" என்று வர்ணித்ததாகவும் ஆனால் தற்போது வெறும் 8 ஆண்டுகளில் இந்நகரம் அதிசயமாக மாறியுள்ளதாக கூறினார்.
தனது ஞானோதய தினமான 23-ம் தேதி, சத்குரு அவர்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து காசிக்கு ஆன்மீக புனிதப்பயணம் மேற்கொண்டுள்ள பக்தர்களுக்கு அருளுரையும், சக்திவாய்ந்த தியான பயிற்சிகளையும் வழங்கினார். சத்குரு தனது உரையின் போது, ஒருவரது வாழ்வில் சமநிலையைக் கொண்டுவருவது குறித்து அங்கு கூடியிருந்த மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.இந்நிகழ்ச்சி சத்குரு யூட்யூப் சேனலிலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

முந்தைய நாள், சத்குரு அவர்கள் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று, அதன் நடைபாதைச் சுவர்களை அழகுபடுத்தும் பணியிலிருந்த கோயில் குழுவினருக்கு தனது ஆதரவை வழங்கினார்.
உலகளாவிய 'மண் காப்போம்' இயக்கத்தின் தொடர்ச்சியாக, சத்குரு அஸ்ஸாமுக்கு வருகை தருகிறார். அஸ்ஸாம் அரசாங்கத்துடன் மண் வளத்தை 3-லிருந்து 6 சதவீதமாக உயர்த்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்படுகிறது. 'மண் காப்போம்' இயக்கத்துடன் இணையும் 10-வது இந்திய மாநிலம் அஸ்ஸாம் என்பது குறிப்பிடத்தக்கது.