1. Home
  2. தமிழ்நாடு

எச்சரிக்கை! 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள கொரோனா!!

எச்சரிக்கை! 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள கொரோனா!!

நாட்டில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

உலகையே உலுக்கிய கொரோனா தற்போது மீண்டும் மெல்ல மெல்ல தலைதூக்கி வருகிறது. நேற்று ஒரே நாளில் அதிரடியாக 12,591 பேருக்கு தொற்று உறுதியானது. இது கடந்த 8 மாதங்களில் இல்லாத தினசரி எண்ணிக்கை என்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


எச்சரிக்கை! 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள கொரோனா!!

நாட்டிலேயே அதிகளவில் கேரளாவில் 3,100 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் 10,827 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 42 லட்சத்து 61 ஆயிரத்து 476 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடெங்கும் 65,286 பேர் கொரோனா சிகிச்சையில் இருந்தனர். மேலும் ஒரே நாளில் 40 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like