1. Home
  2. தமிழ்நாடு

அலர்ட்! இந்த 8 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு!!

அலர்ட்! இந்த 8 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு!!

நாடு முழுவதும் 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 2 ஆவது வாரத்தில், சராசரியாக நாள்தோறும் 108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தற்போது நாள்தோறும் சராசரியாக 966 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார். மகாராஷ்ட்ரா, குஜராத், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவு பதிவாகி வருகிறது.


அலர்ட்! இந்த 8 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு!!

கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கடிதம் எழுதி இருப்பதாக கூறியுள்ள ராஜேஷ் பூஷன், உலக அளவிலான பாதிப்புடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் ஒரு சதவிகிதம் பேருக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் தற்போது பரவும் கொரோனா, ஒமைக்ரானின் திரிபு வைரஸ் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

newstm.in

Trending News

Latest News

You May Like