1. Home
  2. தமிழ்நாடு

நான் உன்னை காதலிக்கிறேன். விடுமுறை நாட்களில் உன்னைப் பிரிந்து வாடுகிறேன் - 8-ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்..!!

நான் உன்னை காதலிக்கிறேன். விடுமுறை நாட்களில் உன்னைப் பிரிந்து வாடுகிறேன் - 8-ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்..!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் வன்கொடுமை சம்பவங்களில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தெலுங்கானா, ஆந்திரா, அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை விட இந்த வகையான கொடூரங்கள் உத்திர பிரதேச மாநிலத்தில் அரங்கேறுவது சமூக ஆர்வலர்களையும் பெற்றோர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிறுமிகளை உறவினர்கள், தெரியாதவர்கள் என பாலியல் தொல்லைகள் கொடுத்து வரும் நிலையில், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களே சில நேரங்களிலும் அத்து மீறுவதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையி உத்திர பிரதேசத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பதோடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நான் உன்னை காதலிக்கிறேன். விடுமுறை நாட்களில் உன்னைப் பிரிந்து வாடுகிறேன் - 8-ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னூஜ் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த வருபவர் ஹரி ஓம் சிங் (47). இவர் தனது பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிக்கு வாழ்த்து மடல் ஒன்றை கொடுத்து அதில் உள்ள செய்தியை படித்தவுடன் கடிதத்தை கிழித்து விடவும் என்று கூறியுள்ளார். புத்தாண்டு விடுமுறைக்கு முன்பாக டிசம்பர் 30-ம் தேதி பள்ளியில் வைத்து இதை அவர் தந்துள்ளார்.

வீட்டிற்கு சென்று அதை படித்து பார்த்த போது தான் மாணவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆசிரியர் ஹரி ஓம் சிங் மாணவிக்கு 12 வரிகளில் காதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘நான் உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். விடுமுறை நாள்களில் உன்னைப் பிரிந்து வாடுவேன். எனவே, நேரம் கிடைக்கும் போது என்னைத் தொடர்பு கொண்டு அழைத்து பேசு. முடிந்தால் நேரில் வந்து பார். நீ என்னை உண்மையாக காதலித்தால் நிச்சயம் பார்ப்பாய்’ என்று எழுதியுள்ளார்.


நான் உன்னை காதலிக்கிறேன். விடுமுறை நாட்களில் உன்னைப் பிரிந்து வாடுகிறேன் - 8-ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்..!!

கடைசியாக இந்த கடித்தத்தை படித்தவுடன் கிழித்து போட்டுவிடு, யாரிடமும் காட்ட வேண்டாம் என்றும் அதில் எழுதியுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் விவரத்தை கூறி, ஆசிரியரிடம் சென்று விசாரித்துள்ளனர். தனது செயலுக்கு மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த ஆசிரியர் ஹரி ஓம் சிங் பெற்றோரை மிரட்டியுள்ளார்.

பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும், மாணவியை காணாமல் ஆக்கிவிடுவேன் என்று அவர் மிரட்டியதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


Trending News

Latest News

You May Like