குட் நியூஸ்..!! வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.76 குறைந்தது..!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.
அதன்படி கடந்த மார்ச் மாதம் 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 351 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகபயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 2,268.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
அதேவேளை, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால், சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1,118.50 விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், இன்று மார்ச் 1-ம் தேதி என்பதால், விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்று முதல் ரூ. 76 குறைந்து, ரூ.2,198.50-க்கு விற்பனையாகிறது. 14.2 எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.