1. Home
  2. தமிழ்நாடு

ஐயப்பன் பக்தர்கள் ஏமாற்றம்!... குற்றாலத்தில் குளிக்கத் தடை..

ஐயப்பன் பக்தர்கள் ஏமாற்றம்!... குற்றாலத்தில் குளிக்கத் தடை..

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி, பழைய அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனிடையே மெயின் அருவியை தவிர ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட மற்ற அருவிகள் அனைத்திலும் தண்ணீர் வரத்து கடந்த 1 ஆம் தேதி சீரானது. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. மெயின் அருவியிலும் தண்ணீர் வரத்து சீரானதால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வெள்ளப்பெருக்கால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஐயப்பன் பக்தர்கள் ஏமாற்றம்!... குற்றாலத்தில் குளிக்கத் தடை..


newstm.in


Trending News

Latest News

You May Like