1. Home
  2. தமிழ்நாடு

சீனாவுக்கு எதிராக இந்தியா-அமெரிக்கா கைகோர்ப்பு!!..நடந்தது என்ன?..

சீனாவுக்கு எதிராக இந்தியா-அமெரிக்கா கைகோர்ப்பு!!..நடந்தது என்ன?..

இந்தியா - அமெரிக்கா இடையேயான ராணுவ பயிற்சிக்கு சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் சீனாவுடனான சர்வதேச எல்லையில் இந்தியா-அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த கூட்டு ராணுவப் பயிற்சியானது, இந்தியா மற்றும் சீனா இடையேயான ஒப்பந்தத்தை மீறுவதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.

சீனாவின் கருத்துக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்தது. இந்தியா எந்த நாட்டுடன் ராணுவப் பயிற்சி நடத்துவது, யாருடன் ராணுவப் பயிற்சி நடத்தவில்லை என்பது இந்தியாவின் உரிமை என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது . இதை எந்த மூன்றாம் தரப்பும் முடிவு செய்ய முடியாது என்று காட்டமாக கூறியுள்ளது. எங்கள் ராணுவப் பயிற்சியில் மூன்றாம் தரப்பினர் முடிவு செய்ய அதிகாரம் இல்லை என்றும் கூறியது.


சீனாவுக்கு எதிராக இந்தியா-அமெரிக்கா கைகோர்ப்பு!!..நடந்தது என்ன?..



இந்தியாவுடனான கூட்டு ராணுவ பயிற்சிக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததற்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ் கூறுகையில், எங்கள் இந்திய கூட்டாளி தெரிவித்த கருத்தை நான் இங்கு மேற்கொள்காட்ட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். இந்தியா - அமெரிக்கா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சியில் தலையிடுவது சீனாவுக்கு தேவையில்லாத வேலை என்று அவர் விமர்சித்துள்ளார்.


newstm.in

Trending News

Latest News

You May Like