1. Home
  2. தமிழ்நாடு

சூப்பர்! 73 வயதில் 10ஆம் வகுப்பு பாஸ் ஆன நடிகை!!

சூப்பர்! 73 வயதில் 10ஆம் வகுப்பு பாஸ் ஆன நடிகை!!

மலையாள குணச்சித்திர நடிகை தனது 73ஆவது வயதில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.

பகத் பாசில், அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்ற படத்தில் அபர்ணாவுக்கு அம்மாவாக நடித்தவர் குணச்சித்திர நடிகை லீனா ஆண்டனி. படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் திடீரென ஒரு பிரேக் எடுத்துக் கொண்டார்.

காரணம், இவர் தனது படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். சிறு வயதில் படிப்பை தொடர முடியாத வருத்தத்தில் இருந்த இவருக்கு மகனும், மருமகளும் ஊக்கம் அளித்தனர்.


சூப்பர்! 73 வயதில் 10ஆம் வகுப்பு பாஸ் ஆன நடிகை!!


இவர் ஏற்கனவே இரண்டு முறை 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், மூன்றாவது முறையாக தேர்வு எழுதி சாதித்துக் காட்டியுள்ளார் 73 வயது ஆகும் லீனா ஆண்டனி.

தொடர்ந்து 11ஆம் வகுப்பு படிக்க விரும்புவதாக கூறியுள்ள இவர், ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்பிற்கும் செல்கிறார். தனது விடா முயற்சியால் படித்து 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெற்ற இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


சூப்பர்! 73 வயதில் 10ஆம் வகுப்பு பாஸ் ஆன நடிகை!!


குறிப்பாக கேரள கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி லீனாவுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். பலரும் இவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like