1. Home
  2. தமிழ்நாடு

லீவ் லெட்டர் எழுத வேண்டிய வயதில் லவ் லெட்டர்..பூனம் பாஜ்வாவுக்கு லவ் லெட்டர் கொடுத்த 7 ஆம் வகுப்பு பள்ளி மாணவன்..!!

லீவ் லெட்டர் எழுத வேண்டிய வயதில் லவ் லெட்டர்..பூனம் பாஜ்வாவுக்கு லவ் லெட்டர் கொடுத்த 7 ஆம் வகுப்பு பள்ளி மாணவன்..!!

சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மும்பை நடிகை பூனம் பாஜ்வா. இந்த படத்தை தொடர்ந்து இவர் தெனாவட்டு, அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிறப்பால் பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். தற்போது இவர் திரைப்படங்களில் நாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்து வருகிறார். சில ஆண்டு இடைவெளிக்குப்பிறகு கேரக்டர் நடிகையாக நடித்தார். ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை-2 என பல படங்களில் நடித்த பூனம் பாஜ்வா தமிழ்ப்படங்களில் மட்டுமின்றி மலையாளத்தில் கேரக்டர் நடிகையாகவும் நடித்து வந்தார்.

அத்துடன் சமீபகாலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு தற்போது இல்லை. வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை பூனம் பாஜ்வா, கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் பதோன்பதம் நோட்டந்து எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


லீவ் லெட்டர் எழுத வேண்டிய வயதில் லவ் லெட்டர்..பூனம் பாஜ்வாவுக்கு லவ் லெட்டர் கொடுத்த 7 ஆம் வகுப்பு பள்ளி மாணவன்..!!



இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தனக்கு திருமண ப்ரோபோசல் அனுப்பி இருந்ததாக பூனம் பஜ்வா கூறி இருக்கிறார். அதில், உங்களை எனக்கு பிடிக்கும். நான் உங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். எனக்கு 21 வயதாகும் வரை காத்திருங்க நான் ரெடி. எனக்கு வயது வித்தியாசம் ஒன்றும் பிரச்சனை இல்லை. என் அம்மாவை சமாளித்துவிட்டேன். திருமணத்திற்கு பின்னும் கிளாமராக நடிக்கலாம் என அந்த மெசேஜில் அவன் குறிப்பிட்டு இருக்கிறார் என்று நடிகை பூனம் பாஜ்வா கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like