1. Home
  2. தமிழ்நாடு

இனி, போக்குவரத்து நெரிசல் இருக்காது.. சென்னையின் 7 சாலைகள் அகலமாகிறது..!

இனி, போக்குவரத்து நெரிசல் இருக்காது.. சென்னையின் 7 சாலைகள் அகலமாகிறது..!

சென்னை மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக மேம்பாலம், சாலை விரிவாக்கம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த அடிப்படையில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சென்னையில் உள்ள 7 முக்கிய சாலைகளை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, அண்ணா சாலை - மத்திய கைலாஷ் இடையேயான 3 கிலோ மீட்டர் தூரமுள்ள சர்தார் படேல் சாலை, பாந்தியன் சாலை - கூவம் இடையேயான 0.72 மீட்டர் தூரமுள்ள எத்திராஜ் சாலை, கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை - அண்ணாநகர் முதலாவது பிரதான சாலை வரை 1.4 கிலோ மீட்டர் தூரமுள்ள கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை.

இனி, போக்குவரத்து நெரிசல் இருக்காது.. சென்னையின் 7 சாலைகள் அகலமாகிறது..!

நெல்சன் மாணிக்கம் சாலை - வள்ளுவர் கோட்டம் சாலை வரை 1.1 கிலோ மீட்டர் தூரமுள்ள டேங்க் பண்ட் சாலை, அண்ணா சாலை - பாந்தியன் சாலை வரை 1.3 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரீம்ஸ் சாலை, 1.3 கிலோ மீட்டர் தூரமுள்ள நியூ ஆவடி சாலை, 1.5 கிலோ மீட்டர் தூரமுள்ள பெரம்பூர் பேரக்ஸ் சாலை ஆகிய 7 சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.

சர்தார் படேல் சாலையைப் பொறுத்தவரை தற்போது 20 மீட்டர் (65 அடி) அகலத்தில் உள்ளது. இது, 30.5 மீட்டர் (100 அடி) அகலப்படுத்தப்படுகிறது. அதேபோன்று எத்திராஜ் சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, டேங்க் பண்ட் சாலை, கிரீம்ஸ் சாலை, நியூ ஆவடி சாலை ஆகியவை 18 மீட்டர் (59 அடி) வரை அகலமாகின்றன. பெரம்பூர் பேரக்ஸ் சாலையை 24 மீட்டர் (78 அடி) வரை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like