நேபாள விமான விபத்தில் இறந்தவர்ககளில் 68 பேரில் 5 பேர் இந்தியர்கள்..!! இன்று ஒருநாள் தேசிய துக்கம் அனுசரிப்பு..!!
நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 5 இந்தியர்கள் உள்பட 68 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக எழுந்த தொழில்நுட்ப கோளாறுகளால் பயணிகள் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது என்றும், அங்கு நிலவிய காலநிலையும் விமான விபத்துக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் பலியானவர்களில் 5 இந்தியர்கள் உட்பட 68 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கோர விபத்தையடுத்து நேபாள அரசு இன்று ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. விபத்தில் இறந்தவர்களுக்கு இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா இரங்கல் தெரிவித்தார். விமானத்தில் பயணித்தவர்களில் 53 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், 6 குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 5 பேரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.