1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டில் வறுமை, குடும்பை சூழல் காரணமாக 6,718 மாணவர்கள் உயர்கல்வி தொடரவில்லை..!!

தமிழ்நாட்டில் வறுமை, குடும்பை சூழல் காரணமாக 6,718 மாணவர்கள் உயர்கல்வி தொடரவில்லை..!!

2021-22-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்ததாக 2022-23-ம் கல்வியாண்டில் உயர்கல்வியை தொடராமல் இருந்தால், அதற்கான வழிகாட்டுதல்களை வழங்க அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர் மாணவர்கள் கூட்டம் ஆகஸ்ட் 26-ம் தேதி நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் 79,762 மாணவர்கள் கலந்துக் கொண்டு உயர்கல்வி ஆலோசனை பெற்றனர். அவர்களில் 8,249 பேர் இந்தாண்டு உயர்கல்வி தொடராதது கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களை தனித்தனியாக தொடர்பு கொண்டதில் 1,531 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வறுமை, குடும்பை சூழல், நிதிப் பற்றாக்குறைஆல் தமிழ்நாட்டில் 6,718 மாணவர்கள் உயர்கல்வியை தொடரவில்லை.

மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக வரும் 20 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2021-22 ஆம் ஆண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு முடித்து உயர்கல்வி தொடராத மாணவர்கள்ள மற்றும் அவர்களது பெற்றோருக்கான வழிகாட்டல்சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் வறுமை, குடும்பை சூழல் காரணமாக 6,718 மாணவர்கள் உயர்கல்வி தொடரவில்லை..!!

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்கள் குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அளிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டும் ஆலோசனை மையம் உருவாக்கப்படும். இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முறையாக கொண்டு சேர்ப்பதற்கு ஏதுவாக தொடர் வகுப்புகள் நடத்தப்படும். முன்னாள் மாணவர்களைக் கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நெறிப்படுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like