1. Home
  2. சினிமா

உனக்கும் 67, எனக்கும் 67… ட்ரெண்டாகும் ‘T67’!!

உனக்கும் 67, எனக்கும் 67… ட்ரெண்டாகும் ‘T67’!!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படம் நடிகை த்ரிஷாவை மையப்படுத்தியும் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தொடர்ந்து நான்கு நாட்கள் அப்டேட் கொடுக்கப்பட்டது.

முதலில் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அர்ஜூன், மன்சூர் அலிகான், சாண்டி, கவுதம் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் உள்ளனர். அதே போல் 14 ஆண்டுகளுக்கு பிறகு த்ரிஷா - விஜய் உடன் ஜோடி சேர உள்ளார்.


உனக்கும் 67, எனக்கும் 67… ட்ரெண்டாகும் ‘T67’!!


அதைத் தொடர்ந்து படத்தின் பூஜை வீடியோ வெளியானது. பின்னர் படக்குழு ஷூட்டிங்கிற்காக காஷ்மீர் செல்லும் தகவல் வெளியானது. பின்னர் அனைவரும் விமானத்தில் செல்லும் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 3ஆம் தேதி படத்தின் பெயரை படக்குழுவினர் வீடியோ உடன் வெளியிட்டனர். தளபதி 67 படத்திற்கு லியோ என பெயர் சூட்டியுள்ளனர். படம் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


உனக்கும் 67, எனக்கும் 67… ட்ரெண்டாகும் ‘T67’!!


இதனால் லியோ என்ற பெயரும், தளபதி67 என்ற ஹேஷ் டேக்-கும் இணையத்தில் வைரலானது. ஆனால் இது இல்லாமல் மற்றொரு ஹேஷ் டேக்-கும் சமூக வலைதளங்களில் வைரலானது.

அது என்ன வென்றால் T67 என்பதுதான் அந்த ஹேஷ் டேக். இந்த படம் விஜய்க்கு 67 படம் என்பதுபோல், த்ரிஷாவுக்கும் 67ஆவது படம்தான். அதனால் த்ரிஷா ரசிகர்கள் T67 என்று ட்ரெண்ட் செய்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like